பூஸ்,
பகலைப்போலவே
இரவென்பதும் பெருங்கனவு.
கருமை
நித்திலமான சுடர்
உன் நெடி பாவும்
இவ்விரவு
ஓய்ந்த வெள்ளமொன்றில்
சேகரமாயிருக்கும் ஒளிப்போட்டுக்கள்
கண்களை திறந்துகொண்டே
நிர்பந்திக்கப்பட்ட
கதிரையிலிருந்து உன்னை மீட்கிறேன்
இரவொரு சொல்
அல்லது மௌனம்
பூஸ்,
இரவொரு இசை
நிறைவேறா சபதங்களின்
மொழி.