Home

மெலிதான மாதுளையின் மணம் காற்றில் கலந்தது. கோலின் மீது செதில்களாக இறக்கைகள் முளைக்கத்தொடங்கின. தேவதையர் தாம் கோர்த்த பச்சிலைகளை என்னுடலாக்கினர். தூரத்திலிருந்து புல்லாங்குழலின் இசை புகைச் சுருள்களாக மிதக்கதொடங்கியது. தூரத்திலிருந்து புல்லாங்குழலின் இசை புகைச் சுருள்களாக மிதக்கதொடங்கியது. தேவதையர் என்னை “மீக்காயீல்” என்றழைத்தனர்.

தோமஸ் காலமற்று இடமற்று அலையும் அஃறிணை நாடோடி. சந்தர்பத்திற்கேற்றாற்போல் உருவமொன்றினுள் அடைந்து பின்னர் காரியம் முடிய வெளிக்குத் திரும்புகிறது. நான் தோமஸை முதன்முதலிற் கண்டபோது பிரகாசமான ஒளி என்றே நம்பினேன். என்னோடிருந்து வெளிக்கு திரும்பும் வரையிலும் அது பிரகாசமாகவே இருந்தது.

ஷீத் கிண்ணம் நிறைந்த லைட்கற்களுடன் என்னைப் பார்த்தான். அவை சதைப்பற்றான நத்தைகளாகிக் கிடந்தன. உவர்நீரை உறிஞ்சி தம்முடலை பொன்னிறமாய் ஒளிர்த்துக்கொண்டு ஒன்றன்மீது ஒன்று அழுத்தி அணைத்தபடி ஊர்ந்தன. பொன்னொளியில் கிறங்கிப்போயிருந்த மீக்காயீல் தனது இரண்டு இறக்கைகளையும் அகல விரித்தான்.

என்னிடமிருக்கும் எல்லா ஞாபகங்களையும் இலகுவாக வீடொன்றிக்குள் அடைத்துவிடலாம். அல்லது என் ஞாபகங்கலெல்லாம் ஒரு வீட்டிற்குளிருந்தே உருப்பெறுகின்றன. செவ்வக தீப்பெட்டிகள் முறையற்று அடுக்கப்பட்டு வெவ்வேறு நிறமிடிட்டிருப்பதைப்போல அங்கங்கே முளைத்திருக்கும் வீடுகளின் நடுவில் உடல் முழுக்க ரவைகளால் துளைக்கப்பட்டு உலகை ஆயிரம் கண்கள் கொண்டு பார்க்கும் ராணுவக் குடியிருப்பொன்றே என் ஞாபகங்களின் இருப்பிடம் – வீடு.

வீடு சேர்த்தலுக்கும் விலகுதலுக்குமான கூடு. இருப்பவற்றாலும் இல்லாதவற்றாலும் நிறைவுற்றிருக்கும் அமைப்பு. மனிதர்கள், மிருகங்கள், தளபாடங்கள், உரையாடல்கள் என்று எல்லா அந்நியத்தையும் அகற்றிவிட தனித்திருக்கும் வீட்டிற்கென்று சில குணங்கள் இருக்கின்றன. அது சுவர்களின் அமைவுகளுக்கும் என் தனிமைக்குமான தொடர்பு. காற்றோட்டப்பாதைக்கும் என் சிந்தனைகளுக்கமான தொடர்பு. ஈரலிப்பான நிலத்திற்கும் என் வெற்று முதுகிற்குமான தொடர்பு.

” என் வீட்டைச்சுற்றி அடர்ந்து வளர்ந்த காட்டின் வாசனை. தனித்திருக்கும் இந்த செந்தரையின் மீதிருந்து ஒரு முழு நகரத்தையும் அதன் இருண்மையையும் கக்கிக்கொண்டிருக்கும் என் கனவுகளிலிருந்து விடுவித்துக்கொள்ளமுடியாதளவு, இரண்டு பெரிய உச்சியினிடையே தேங்கிப்போயிருக்கும் அசைவற்ற நீர்நிலையாகி கட்டிலின் நடுவே அமுக்கப்பட்டிருக்கிறேன். இதிலிருந்து எனக்குள் தோன்றும் கனவுகள் என் அன்றாடத்தோடுஎவ்விதத்திலும் தொடர்பற்றவை. விழிப்பு நிலைக்கு அப்பாலிருக்கும் இன்னொரு நிலத்திற்கு உரித்தானவை. “

முதிரும் ஒரு சொல்

அவர்கள் லைட்கற்களை பொறுக்கிச் சேர்க்க நேர்த்தியாக சீவப்பட்ட அரைத்தேங்காயோடு வைத்திருந்தார்கள். அவர்களின் மெல்லிய விரல்களால் நுரைத்தொதுங்கும் சிறிய அலைகளைத் துழாவி ஏமாற்றமடைந்தனர். ஈரமண்ணைத்தவிர அவர்களால் வேறொன்றையும் எடுக்கமுடியாமற் போக ஷீத்தின் முன் வந்துநின்றார்கள். மீக்காயீல் அச்சிறுவர்களின் இயலாமையால் நரைத்துப்போன அவர்களின் இமைகளைப் பார்க்கிறான். கிராமத்துக் கிணறுகள் முழுதும் அவர்கள் சேர்த்துவைத்த லைட்கற்களின் ஒளி – இனி மங்கிக்கொண்டு போகப்போவதையிட்டு அவர்கள் வருந்தி நின்றார்கள். ஒவ்வொரு இரண்டாஞ் சாமமும் அவர்கள் சிரட்டை நிறைய லைட்கற்களைச் சேர்த்து ஊர்க்கிணறுகள் நெடுக ஒவ்வொன்றாய்த் தூவி ஒளி பொருத்தி வந்தார்கள். அவ்வொளியிற்தான் கிராமத்துப் பெண்கள் அனைவரினதும் நகங்களும் மின்னுவதாயும் ஆண்களின் இமைகள் நிறமடைவதாயும் அச்சிறுவர்கள் நம்பினார்கள். ஷீத்தும் மீக்காயீலும் அவர்களின் நம்பிக்கையை பாழாக்க விரும்பவில்லை. உண்மையில் அம்மூவரின் இமைகளைத் தவிர இருட்டில் ஆயிரம் பட்டாம்பூச்சிகளாய் கிராமத்து ஆண்களின் இமைகளும் மின்மினிகளாய் பெண்களின் நகங்களும் பெருவெளியில் அசைந்துகொண்டிருந்தன. மூவரில் இளையவனான சிறுவன் மீக்காயீலைப் பார்த்து கண்களைக் கசக்கினான். தன் தங்கையின் மினுமினுப்பான விரல் நகங்களை இனி எப்போதும் பார்க்கவே முடியாது என்று நம்பி அழத்தொடங்கினான். அவன் கண்ணீர்த்துளிகள் அலைகளின் மேல் விழுந்து – ஒளி பெற்று – மீன்களாய்ப் பாடிக்கொண்டே ஒளிக்குளத்திற்குள் விரைந்தன. அவை ஷீத் அனுப்பிய செய்திகளை உடலிற்சுமந்து சென்றன. சிறுவர்கள் கவலையை மறந்து பாடிக்கொண்டு விரையும் கண்ணீர்மீன்களை பார்த்துகொண்டிருந்தார்கள். அழுதுகொண்டிருந்த சிறுவன் அலைக்குள் பாய்ந்து அம்மீன் ஒன்றினை பிடிக்க எத்தணித்து முகம் முழுக்க மணற்துமிக்கைகளோடு எழுந்தான். அவனது முகம் நட்சத்திர மீனொன்றைப்போல விகாரமாய்த் தெரிய ஷீத் பொத்தென்று சிரித்தான். ஷீத்தின் சிரிப்பில் வானில் நின்ற நிலா பவளப்பற்களை காட்டிச் சிரிக்க, ஒளிக்குளம் கலைந்தது. படிகமாயிருந்த ஒளிக்குழம்புகள் ஒரு ஊற்றாய் கரைக்கு படையெடுத்தன. வெள்ளி நதியொன்றினைப்போல அவை வளைந்து நெளிந்து எம்மை நோக்கி வந்தன. அவை லைட்கற்களாய் நிரம்பிப் பெருகின

In Magazines

Recent Works

  • முதிரும் ஒரு சொல்
    நீண்ட பகற்கனவுகளின் மீது எனக்கு எப்போதும் ஆட்சேபனைகளற்ற நெருக்கம் இருந்திருக்கிறது. காண்டா கழுகின் ஒற்றை சிறகின் மலை நிழலுக்குள் மறைத்திருக்கும் பாழ் நகரத்தைப் போல பயங்கரமும் விசித்திரமும் நிறைந்த நினைவுகள் பற்றியும், அவற்றின் உருவாக்கங்கள் பற்றியும் யோசிக்கும் போது பகற்கனவுகள் தவிர்க்கமுடியாதவையாகின்றன. நீண்ட தூர வெயிற்கால நடையின் போது வெவ்வேறு நிழல்கள் நிலத்தை மறைத்து நிற்க என்னுடைய நிழல் அவற்றினூடு ஊடறுத்து செல்வதைப்போல இந்த நகரத்தின் இருண்மைகளுக்கூடாக நகர்ந்துகொண்டிருக்கிறேன். என் வீட்டைச்சுற்றி அடர்ந்து வளர்ந்த காட்டின் வாசனை.Continue reading “முதிரும் ஒரு சொல்”
  • விடுவிக்கப்படாத வளவின் வேலிகளின் மேலிருந்து ஒரு பாடல்
    என்னிடமிருக்கும் எல்லா ஞாபகங்களையும் இலகுவாக வீடொன்றிக்குள் அடைத்துவிடலாம். அல்லது என் ஞாபகங்கலெல்லாம் ஒரு வீட்டிற்குளிருந்தே உருப்பெறுகின்றன. செவ்வக தீப்பெட்டிகள் முறையற்று அடுக்கப்பட்டு வெவ்வேறு நிறமிடிட்டிருப்பதைப்போல அங்கங்கே முளைத்திருக்கும் வீடுகளின் நடுவில் உடல் முழுக்க ரவைகளால் துளைக்கப்பட்டு உலகை ஆயிரம் கண்கள் கொண்டு பார்க்கும் ராணுவக் குடியிருப்பொன்றே என் ஞாபகங்களின் இருப்பிடம் – வீடு. ஈரமான செம்மண் தரையில் உருளும் நான்கு சக்கரங்களின் கண்ணாடி யன்னல் வழி ஊதா நிற புகையாய் மிதந்தெழுகின்றன ஒன்றுக்கொன்று முரணான பார்வைகளும் ஞாபகங்களும்.Continue reading “விடுவிக்கப்படாத வளவின் வேலிகளின் மேலிருந்து ஒரு பாடல்”
  • போருக்குப் பின்னரான சில சிறுகதைப்பிரதிகள் மீதான வாசிப்பும் புரிதலும் – 1
    போர் மனிதர்கள் காணாத, உணராத ஒன்றல்ல. போர்களையும் அதன் கொடூரங்களையும் அழிவுகளையும் வரலாறு நெடுக மனித இனம் கண்டுகொண்டே வந்திருக்கிறது. போருக்கான சூழல், அதன் பின்னர் மூளும் மனிதர்களின் அரசாங்கங்களின் சுயநலம், தவறான வழிநடத்தல்கள், துரோகங்கள், தோல்விகள், இழப்புகள், மரணங்கள், கண்ணீர், அத்துமீறல்கள், போரில் வெற்றி, அகதிகள், ஊனமுறவர்கள், அனாதையாக்கப்பட்டவர்கள், காயப்பட்டவர்கள், காணமல் போனவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், பண்பாட்டு அழிவு, வடுக்கள், ஏளனங்கள், உள்ளூர மூண்டு எழும் கோபம், ஞாபகங்களில் இருந்து அகற்றிவிடமுடியாமல் கீறலாகிப்போன நாட்கள், மீண்டும் போருக்கானContinue reading “போருக்குப் பின்னரான சில சிறுகதைப்பிரதிகள் மீதான வாசிப்பும் புரிதலும் – 1”
  • கண்ணீர் ஊட்டப்ப இரவுகள்
    ஒரு முழுமையான கட்டுரையினை – மொழித் தொடர்ச்சியினை எழுதுவதற்கு வேலைகளும் சூழ்நிலைகளும் ஒத்துழைக்காததன் பொருட்டு குறிப்புகளாக நாவலைப் பற்றி உங்களோடு உரையாடிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மனிதர்களோடு மிகவும் குறைவாக தொடர்பாடலிருக்கும் மிருகங்கள், பறவைகள், தாவரங்கள், உண்மைகள் போன்றவற்றோடு என்னையும் அடையாளப்படுத்திக்கொள்வதால் இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட விரும்பவில்லை. அடையாளங்கள் என்ற சொல்லோடும் கசார்களின் அகராதி மிக நெருக்கமாகப் பொருந்துகிறது. பெருங்கடலை சுருட்டி ஒரு நூற்பைக்குள் நழுவ விட்டது போன்ற இந்நாவலை என் ஒழுங்கற்ற – நிச்சயமற்ற – அவதியானContinue reading “கண்ணீர் ஊட்டப்ப இரவுகள்”
  • பசியோடிருந்த சொல்வனக் கிளிக்கு மொழி பிதற்றி குரல் அழிந்து போனது
    மௌனத்தினுள் தோய்ந்திருக்கும்உன் அழுகைக்கு முன்நானே பனிச்சுடராகி நிற்கிறேன் நித்தியமான சுடர்த்திரிகளேதேவதைக் குழந்தைகளாகின்றனதேன் குளவிகளாகின்றன உன் அழுகைகசிந்து ஒழுகும்மௌனப்பாறை ஆழ்ந்து மூழ்கிஉன் கண்ணீர்த் துளியைஇரண்டாகப் பிளக்கிறேன் கூர்வாளில்தேன் குளவிகளின் பிசுபிசுப்பு சிதறி மோதும் பனிக்கோளத்தின்சத்தம் சுடர் கலைந்து கனவில் மூழ்கிறேன்குலைந்து ஒதுங்குகிறதுஎன் உடல்.

அனைத்துப் பதிவுகளுக்குமான பக்கத்திற்கு

சூன்ய மினுப்பு


இச்சிறையை வெறுமையென்றும் இருளென்றும் அடையப்படுத்திவிடமுடியாது. வாசல்கள் அற்ற காற்று வழியற்ற புழுத்துப்போன அறையொன்றிக்குள் நானில்லை. இவ்வறை எதிரே விரிந்திருக்கின்ற மைதானத்தின் தொடர்ச்சி. காற்று என்று முன்னொரு நாள் பெயர்வைத்த மரத்தின் கிளை. நானும் என் புத்தகங்களும் சில உடுப்புகளும் இன்னமும் திருத்தப்படாத கட்டிலும் மட்டுமே இவ்வறைக்குள் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். உசும்பியின் தாய் இசைத்துக்கொண்டிருக்கும் பியானோவின் இசை ஒவ்வொரு இடுகளிலிருந்தும் கசிகின்றன. கனவொன்றில் அந்நாள் அலைந்த கருநீலப்பூச்சியும் பேகனின் ஓவியக்கூடமும் இதுதான். 

தன் பாட்டன் பாட்டியிடமிருந்து தன்னை அறிந்துகொள்ள இத்தனை காலமும் எழுதித்தீர்த்து முடியாமல் இன்னமும் அவனென்னும் நான் கரைந்து போக மழைக்குள் ஒவ்வொரு இடைவெளிகளையும் நிரப்பிக்கொண்டு விறைத்துப்போய் நிற்கிறார்.


Miscellaneous

தோமஸிலிருந்து புறப்படுதல் அல்லது “பொத்”தென விழுதல்.

NOVEMBER 7, 2018

இங்கிருந்து முன்னும் பின்னும் அருகிலும் இன்னும் எங்கெல்லாம் பார்வையும் அறிவும் படர்கிறதோ அங்கெல்லாம் நியமும் புனைவும் ஊடறுத்துக் கலந்த ஓவியமாகவே தெரிகிறது. எங்கெல்லாம் மனிதர்கள் கனமாகவும் கூரிய ஆயுதங்களோடும் தோன்றுகிறார்களோ அங்கெல்லாம் கறுப்பை அள்ளி எற்றிவிடுகிறேன். எங்கெல்லாம் என் புருவங்கள் தாழ்ந்து இதயத்தின் ஆழத்தில் ஒரு பிடியளவு ரத்தம் உலர்கிறதோ அங்கும் ஈரமான கறுப்பை ஊற்றிவிடுகிறேன். கரைத்தும் கலந்தும் ஊற்றி ஊற்றி எங்கும் இருளின் வண்ணமாயிற்று. எதுவுமில்லா ஒன்றிலிருந்து உண்டான ஞாபகங்களில் நியத்தையும் புனைவையும் எப்படிப் பிரித்தறிய. இத்தனை கனமான கேள்வியின் பின்னர் தனித்துப்போன நாளைப்பற்றிய ஞாபகங்களை ஒழுங்குபடுத்துவது எனக்கு இலகுவானதல்ல.

உதிர்ந்த இசைச்சொல்

OCTOBER 23, 2018

மீண்டும் மறுப்பேதும் இன்றி வாங்கி ஊற்றினேன். வாய் நிறைய நுரைத்துக்கொண்டு உள்ளிறங்கியது. அடித்தொண்டை குளிர்ச்சியில் சிலிர்த்தது. முதல் குடிக்குரிய பரபரப்பேதும் இல்லாமல் கையில் குவளையை ஏந்தியபடி ஆடத்தொடங்கினேன். அது ஜொஹான் சபாஸ்டியனின் பக் இன் கம் ஸ்வீட் டெத். தீயைச் சுற்றி ஆடினோம். பெரும் அசைவுகள் ஏதுமின்றி எளிமையான முழுச்சுதந்திரத்தோடு நரம்புகளும் தசைகளும் அசைந்துகொண்டிருந்தன. பேகனின் கண்களில் போதையேறிய எந்த அறிகுறியும் தெரியவில்லை மாறாக நான் களைத்திருந்தேன், மயக்கத்திலிருந்தேன். இருந்தும் பேகனை முத்தமிடவேண்டும் போலிருந்தது. உடல் முழுமையாக வியர்வையிலூறி களைத்துப்போக பேகனின் அருகிற் சென்று தோள்களை கைகளால் அழுத்தி சிவந்த உதட்டோடு முத்தமிட்டேன். அது ” சுதந்திரத்தின்  முத்தம்”.

கண்ணீர் ஊட்டப்ப இரவுகள்

மிலோராத் பாவிச் இன் கஸார்களின் அகராதி பற்றிய பகிர்வு

நின் கைவசம் என் கைப்பிரதி

நகுலனின் கவிதைகள் பற்றிய பகிர்வு

உண்மையின் இசை

ஹாருகி முரகாமியின் நோர்வேர்ஜியன் வூட் பற்றிய பகிர்வு

மெய்யுள் பற்றிய சிறிய ஞாபகப்படுத்தல் – “நூலறிதல்” முகநூல் பக்கத்திற்கு

From the Text

Rating: 5 out of 5.

இரவுக்காக பகலைக் கைவிட்ட அவ்ரம் ப்ராங்கோவிச் போலத்தான் நானும். உலகம் சுறுசுறுப்பாக தீமைகளையும் சூழ்ச்சிகளையும் வன்மங்களையும் கக்கிக்கொண்டிருக்கும் பகல் பொழுதை நெளியும் புழுவைப்போல் பார்க்கிறேன். எல்லாமும் கண்களுக்குத் தெரியும் அவலம். கண்களில் குற்றத்தோடும் முகம் முழுக்க சிரிப்போடு உடலைச் சலவை செய்து கொள்ளும் மனிதர்களின் வாசம் நிறைந்த காலத்தை கடப்பது பெருந்துயராயிருக்கிறது. இடக்கண்ணில் பொறாமையும் வலக்கண்ணின் சூழ்ச்சியும் நிறைந்தவர்களின் முன்னால் ஒரு நீர்த்துளியாய் ஆவியாகிறேன். கொடுஞ்சூட்டில் தகிக்கிறேன். ஆனால் இரவு அவ்வாறானததல்ல. எல்லா வன்மமும் நிறைந்த உலகத்தின் மீது கறுப்புத் திரையிடுகிறது. குற்றங்கள் பார்வைக்குதொலைவாக நடந்தேறுகிறது. எதுவும் புலன்களுக்குள் உணரப்படும் போது தான் குழப்பம். இதை தப்பித்தல் என்று எல்லோரும் நினைக்கலாம். உண்மையும் அது தான், பகலின் கொடூரக்கண்களில் இருந்து தப்பித்து இரவிடம் அடைகிறேன். விபத்திலிருந்தது தப்பித்த ஒருவரை அருள்நிறைந்தவராய்ப் பார்க்கும் மனிதர்கள் பகலிலிருந்து தப்பிப்பவர்களை அதே கண்கொண்டு பார்க்கத் தவறுகிறார்கள்.

கண்ணீர் ஊட்டப்ப இரவுகள்

Rating: 5 out of 5.

அந்தின் இறக்கைகளுக்குப் பின்னிருந்த கண்ணாடி யன்னலை வெறித்தபடி நானிருந்தேன். என்னைச்சுற்றி திரும்புதல் பற்றிய ஏக்கம் இருந்தது. மீண்டும் நீலப் பூச்சிட்ட வீட்டையும் அதனுள்ளிருக்கும் எனக்கேயான இருட்டுக்குள்ளும் திரும்ப விரும்பினேன். என்றைக்கும் என்னை வெறுக்காத மௌனத்திற்குள்ளும் என்னைவிட குழப்பங்கள் நிறைந்த ஒழுங்கீனத்திற்குள்ளும் வாழ்க்கை பற்றிய எந்தப் புரிதலும் தேவையற்ற என் சூன்ய வெளிக்குள் திரும்புதல் பற்றிய எண்ணம் எனக்குள் ஊறத்தொடங்கியது. என்றைக்கும் திரும்ப முடியாதென்று தெரிந்தும் காத்திருக்கும் அந்தின் உருவம். பலமுறை திரும்பியும் என்றைக்கும் கிடைக்காத என் சூன்யவெளி. நிழல்வெளி எனக்குள் தொடர்ச்சியாக மிதந்தும் அமிழ்ந்து கொண்டிருந்தது. எனக்கு முன்னர் வேலியிடப்பட்ட வீட்டை நோக்கிய எனது பாடல் கண்முன்னே உடையும் நீர்குமிழிக்குள்ளிருந்து வெடித்துப்பரந்தது.

விடுவிக்கப்படாத வளவின் வேலிகளின் மேலிருந்து ஒரு பாடல்

Rating: 5 out of 5.

நகுலன் தளர்ந்து போனார். நிலத்தில் வெகுளியாக ஓடுகின்ற வெள்ளத்தைப் பார்த்தவாறே, இன்னும் இறுக்கமாக கைகளைப்பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தார். அது சுசீலாவை மறக்க முடியாமல் திணறுகின்ற கிழவன் ஒருத்தனின் இயலாமைக் கண்ணீர். எறும்புகளின் வரிசை போல மெலிந்திருந்தது அந்தக் கண்ணீர்த் தடம். என்னால் நகுலனை பார்க்கமுடியவில்லை. காதுகளும் மூக்கும் அடைக்கத்தொடங்கியது. குரல் வளை நிரம்பியது. மூளை நரம்புகள் குறுகுறுத்தன. அத்தனை இயல்பாக அழ நகுலனால் முடிகிறது, ஆனால் என்னால் இந்த மின்விளக்குகளின் ஒளியில் இரும்பு மனிதர்களின் முன்னால் அழ முடியவில்லை. இன்றில்லை, என்றுமே வெளிப்படையாக அழுவதை தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறேன். அறைக் கட்டிலுக்கு கீழும் கதிரைக்கு மேலும் யன்னல் கரையிலும் அழுவதையே சுதந்திரமாக உணர்கிறேன். நகுலன் வெடித்தழுத போதெல்லாம் சுசீலா கூடவே இருந்திருக்கிறாள். ஆறுதல் சொல்லியிருக்கிறாள். ஸலம் சிகரட்டும் குப்பி கான்யாக்கும் கொடுத்திருக்கிறாள். நகுலன் இன்னும் இன்னும் தோற்றுகொண்டே போக அவள் நகுலனோடு  நிறைந்திருக்கிறாள். இவை எதுவுமறியாமல் இன்னொரு சுசீலா என் கண்முன்னே அலைகின்றாள். தூய்மையாக. பசும் பால் நிறத்தில். தெளிந்த வானத்தில் நிறைந்து நிற்கும் வெள்ளை மேகமாக. நினைவில் சுசிலாக்களின் உருவம் மாறினாலும் சுசிலா மாறவில்லை. சுசீலா உருவம் இல்லை. நினைவு. ஞாபகம்.  நான் கடந்துவந்த எல்லா சுசிலாக்களும் என் சுசிலாவின் ஏதோ ஒன்றை நினைவுபடுத்தியிருக்கிறார்கள். நகுலன் அனுங்குகிறார். வார்த்தைகள் தெளிவில்லாமல் புலம்புகிறார், அலைவரிசை சரியாக பிடிபடாத வானொலியைப்போல.

நின் கைவசம் என் கைப்பிரதி

Categories

Brinthan

Colombo , Sri Lanka

kanesalingambrinthan187@gmail.com

← Back

Thank you for your response. ✨