நான் என்னும் நப்பாசை – 02

தாடிக்காரன் அறிமுகம் ஆனார் . இன்னும் திரை இசையிலேயே மூழ்கி பொய் இருப்பதற்கு இவர்தான் சால காரணம். காரணம் வாலி , வைரமுத்துவிடம் இருந்து என்னை கிள்ளி கிள்ளி எடுத்தார். நானும் இந்த நூற்றாண்டும் வாசித்த பின் முழுமையாக அல்லி எடுக்கப்பட்டு விட்டேன். வவுனியாவின் வாடிக்கையான கடை எனக்கு வாலியை திருப்பதி செய்யவில்லை. நகர்ப்புறங்களிலும் அலைந்தேன் வாலி அங்கொன்று இங்கொன்றாய் சிதறிக்க்கிடந்தார் ..அவரை ஒன்று சேர்த்ததில் அவரின் நகம் அளவுதான் உருப்பெற்றது. எனக்கு வாலி மீது இருந்த தீராத காதல் ஊரை விட்டு ஓட வைத்தது. கொழும்பு நகரின் அழுக்கான வீதிகளையும் உடைந்து சிதறிப்போன சந்ததிகளையும் அறிமுகப்படுத்தியது. வாலிக்காக ஒரே ஒரு முறை தான் புத்தக கொள்வனவுக்கு சென்றிருந்தேன். பை நிறைய புத்தகங்களுடன் திரும்பினேன் திருப்பதி கொண்டேன். வாலியை தேடிய இடங்களில் என்னோடு மேலும் சிலரையும் தேங்கிக்கொண்டார்கள். புதுமைப்பித்தன் அவர்களில் மிக முக்கியமான ஒருவர். புதுமைப்பித்தன் சிறுகதைகள் பாகம் ஒன்று என்ற புத்தகம் என் கைகளில் பட நானும் வாசித்து பாப்போம் என்று பில் போட்டாகி விட்டது . புத்தகத்தின் கனத்திற்கு ஏற்ற பணமும் காலியாக போனது. வாலியின் ஒரு புத்தகத்தை வைத்து விட்டு புத்தமைப்பித்தனை சொருகிக்கொண்டேன் .

என் அலமாரி ராக்கைகளை அலங்கரித்த முதல் சிறுகதை தொகுப்பு இதுவாகும். வாங்கியதில் இருந்த ஆர்வம் வாசிப்பதில் ஏற்றப்படவில்லை. பாகம் பக்கமா எழுத்துக்கள் என்னை முகம் சுளிக்க வைத்தன. ஆறு ஏழு வரிகளுக்குள் முடிந்து விடுகிறது கவிதை இது என்ன பக்கம் பக்கமாக என்ற சலிப்பு ஏற்றப்பட்டது. புதுமைப்பித்தன் காலவரையறை இல்லாமல் ஒதுக்கிவைக்கப்பட்டார் (இது 2014 இல்). மீண்டும் வாலி ……அவரின் வாழி இல் நாட்களை நகர்த்தினேன் பெரிய கவிஞர் என்ற மமதையில். இடையில் வாசிப்பும் அனுபவ பகிர்வும் (தமிழ் மாமன்ற நிகழ்வு , தமிழ்மாமன்றம் பற்றி விரிவாக எழுதவேண்டும் ,எழுதுகிறேன் காலதாமதமாக ) நடந்த போது தன அப்துல் ரகுமான் அறிமுகம் ஆனார். நான் வாசித்த தனிநபர் எழுதிய புத்தகங்களில் அதிகமானவை இவருடையதே. அன்று வரை இலகுவாக இருந்த கவிதைகள் இவரால் புது பரிமாணம் பெற்றன. ஒவ்வொரு வரிகளுக்கு பின்னும் சமுத்திர பரப்பு விடயங்கள் பொதிந்து இருப்பதை அவர் காட்டினார். சொற்களின் கோர்வைகள்தான் கவிதை ஏன்டா விம்பம் சிதறி பல கோர்வையான விடயங்கள் சில சொற்களில் என்று புரிய ஆரம்பித்தது. கவிதையை மட்டும் அன்றி பல கவிஞர்களையும் அறிமுகம் செய்தார் . இன்று நான் மொழிபெயர்க்கப்பட்ட அரபுக்கவிதைகளை வாசிக்கவும் இரசிக்கவும் அவரே பிள்ளையர் சுழி . அவரின் புத்தகங்கள் என்னை இன்னொரு தளத்திட்கு எடுத்து சென்றது. இன்று நான் வியந்து பார்க்கும் கவிஞர் அப்துல் ரகுமான் என்பதில் என் வாசிப்பு வட்டம் அடைந்துள்ள விருத்தியை உணரக்கூடிய அளவு உள்ளது.
இது இவ்வாறு இருக்க வவுனியா தேசிய ……………

நான் என்னும் நப்பாசை – 01

உலகம் சரமாரியாக சொரிந்து கொண்டிருக்கும் நாகரீக அம்புகளில் சிக்கி துவண்டு போய் இருக்கின்றோம் நானும் எனது புத்தகங்களும். விலாசமான பாதைகளையும் நீண்ட தூர பயணங்களையும் எனக்கு கற்று தந்தது புத்தகங்கள். இரண்டு மூன்று முறை ஆழமான பாதாளங்களுக்குள்ளும் தள்ளி விட்டு சென்றிக்கின்றது . சந்தோஷமான காலங்களையும் , துக்கமான காலங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டு இரவும் பகலும் எனக்காக உழைத்த இயந்திரங்கள். என் விருப்புக்களையும் வெறுப்புக்களையும் நியாயமாக அறிந்த காகித தோழன். என் கையினை இருக்க பிடித்து உலக நுழைவாயிலுக்கு அருகில் கொண்டு போய் , ” இந்த ஓடி விளையாடு ” என்று தள்ளி விட்டு விட்டு ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கும் தந்தை போன்றது எனது புத்தகங்கள்.
இன்று குருமன்காட்டில் கல்யாண மண்டபங்கள் செறிந்த இடம் ஒன்று உண்டு. வீதியால் பாடசாலைக்கும் வகுப்புகளுக்கும் செல்லும் போது , எந்த மண்டபத்தில் சனக்கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதை வைத்து மண்டபத்தை எடை போட்டு கொள்வேன் மனிதர்களை எடை போடுவதற்கு பதிலாக. என் அறிவுக்கு எட்டிய காலத்திலேயே இந்த மண்டபங்கள் முளைத்தன. இந்த மண்டபங்களோடு நகை கடை ஒன்றும் மேடை அலங்கார கடை ஒன்றும் உருவாகி இருந்தது . இப்படி கல்யாணம் தொடர்பான சுவர்களுக்குள் நாத்திக ஊரில் ஆலயம் போல ஒரு கடை இருந்தது. இவை எதுவும் முளைக்க முதலே அந்த கடை இருந்தது. அதன் அயலுக்கும் அந்த கிடைக்குமா தொடர்பு முட்டு சந்தியில் மைதான வரைபடம் கீறுவது போன்றது. இவளவு அதிகம் கூறுவதட்கு ஒரு கூரிய காரணம் ஒன்று உண்டு. வாசிப்பு தாகத்திற்கு சிரட்டையில் நீர் வார்த்து தந்தது அந்த அறிவாலயம் தான் . என் தேடலுக்கு கொஞ்சம் கொஞ்சம் தீர்வு தந்து கொண்டிருந்தது.
நான் முதலில் சொன்ன நாகரிக அம்புகள் செய்த வேலை எனக்கும் அறிவாலயத்திற்கும் ஒரு நிதர்சன உண்மையை விளக்கியது. ஆரம்பத்தில் அதிகம் புத்தகங்களே இருக்கும். முன் வாயில் இருமருங்கிலும், உள் ராக்கைகள் எல்லாவற்றிலும் புத்தகங்களே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஏதும் அறியா பதினாறு பாலகனாய் போய் வைரமுத்துவின் கவிதை புத்தகங்களுடன் திரும்பி வந்த காலங்கள் தான் அதிகம். இந்த தினசரி நிகழ்ச்சிக்கு சினிமா தான் அடிப்படை காரணம். கையில் காசு கசகசக்கும் போது எல்லாம் என் அலமாரி ராக்கைகளை வைரமுத்து அலங்கரித்து விடுவார். You tube இல் வைரமுத்துவை தேடி அந்த கம்பீர குரலால் மீண்டும் மீண்டும் ஈர்க்கப்பட்டேன். மீண்டும் மீண்டும் அவரை தேடி அலைந்தேன். என் தீராத வாசிப்பு தேடலின் முதல் தீனி வைரமுத்து. வைரமுத்துவின் நாவல்கள் கண்ணில் தென்பட்டாலும் கவிதை வாசனை என்னை கொஞ்சம் கூடாவாகவே ஈர்த்து விட்டது.
 

 
கொஞ்சம் ஒரு சென்டிமீட்டரால் என் வாசிப்பு ஆரை அதிகமாக என் ராக்கைகளை கண்ணன் , விஜய் , தபு சங்கர் போன்றவர்களாலும் ஆக்கிரமிக்க பட்டது . கவிதை புத்தகங்களையே என் மனம் மணம் செய்து கொண்டது. இவர்கள் எல்லாம் செய்த பாவம் என் விரல்களும் கவிதை வரைய தொடங்கின. அப்போதெல்லாம் என் கவிதைகளை பார்க்கும் போது என்னுள் மாபெரும் கவிஞன் தலையணை போட்டு உறங்குவது தெரிந்தது. நானும் அவன் தூக்கத்தை தட்டி தட்டி கிறுக்குவேன். நான் ஒரு கொப்பி வைத்து கிறுக்கினேன் சிறு பிள்ளை வரைய பழகுவது போல் . என்னை போல் என் வயதில் யாருமே கவிதை எழுத மாட்டார்கள் என்ற நம்பிக்கை என்னை அதிகமாக ஆட்கொண்டது. நீண்ட காலம் அந்த நம்பிக்கையும் வட்டத்தின் ஆரையும் நீடிக்கவில்லை. இன்று அந்த கொப்பியின் பக்கங்களை புரட்டும் போது என் விரல்கள் சிரிக்கும் மனம் பரிதாபப்படும். அவன் தூக்கத்தை கெடுக்காமல் நிம்மதியாக தூங்க விட்டு இருக்கலாம் என்று மூளை அலறும். ஆரை அதிகரித்தது வட்டம் பெரிதானது. தாடிக்காரன் அறிமுகம் ஆனார்……………….