குர்ரத்துலைன் ஹைதர் மிகவும் கவனத்துக்குள்ளான – கவனத்திற்கு உள்ளான அளவு கொண்டாடப்பட்ட எழுத்தாளர். குர்ரத்துலைன் ஹைதர் – கேப்ரியல் கார்சியா மார்கஸின் சமகாலத்தவர். கேப்ரியல் கார்சியா மார்கஸ் போலவே தனக்கென பிரத்தியேகமான கதை சொல்லல் முறையினைக் கையாண்டவர். தமிழில் ஜெயகாந்தனுக்கும் அகிலனுக்கும் கிடைத்த ஞானபீட விருதை 1989 ஆம் ஆண்டும் பத்ம பூஷன் விருதை2005 உம் பெற்றார்.
குர்ரத்துலைன் ஹைதரின் உதிரும் இலைகளின் ஓசை என்ற சிறுகதை அவரின் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற சிறுகதைத் தொகுதி ஒன்றில் வெளிவந்தது. சிறுகதைத் தொகுதியின் தலைப்பும் உதிரும் இலைகளின் ஓசை என்பதே. குர்ரத்துலைன் ஹைதர் உருது எழுத்தாளர். இந்தத் தொகுதியிலுள்ள பன்னிரண்டு கதைகளில் ”உதிரும் இலைகளின் ஓசை” என்கிற சிறுகதையினைப் பற்றிய குறிப்புகள் இவை.
உலகின் ஆதாரக் கதைசொல்லிகள் பெண்கள். கதைகளை உருவாக்குவதும், அதற்குக் காரணமாக இருப்பதும், கதைகளைக் கடத்துவதும், திரிபடையச் செய்வதும், இடைவிடாமல் கதைகளின் உயிர்ப்பை உறுதி செய்வதும் பெண்கள் தான். உலகத்தின் முதல் கதை சொல்லியாக ஏவாளை கிறிஸ்தவர்கள் சொல்லுகின்றார்கள். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆதித்தாய் இன்னமும் உலகின் ஏதோ ஒரு ஊரில் கதைகளைப் பரப்பிக்கொண்டே இருக்கிறாள். தினசரி எண்ணற்ற மனிதர்களைச் சந்திக்கிறேன். ஒவ்வொரு ஆண்களும் தம்மோடு ஒரு கதையைச் சுமந்துகொண்டு திரிகிறார்கள். ஆனால் ஒவ்வொரு பெண்களையும் பார்க்கும் போது கதைக் களஞ்சியம் ஒன்றை தம்மோடு வைத்திருப்பதைப்போலவே உணர்கிறேன். வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை குப்பைகளைச் சேகரிக்கும் வாகனம் தெரு முட்டுக்கு வரும். ஆண்களும் பெண்களுமாக வீட்டிலிருக்கின்ற குப்பைகளைக் கட்டிக்கொண்டுவந்து கொட்டுவார்கள். ஆண்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டு திரும்பிவிடுவார்கள். பெண்கள் அங்கும் கதையளக்கத் தொடங்குவார்கள். நேரம் கதைகளாக மாறிக்கொண்டிருக்கும். தெரு முட்டு முழுக்க கதையின் மணம் அள்ளிவீசும். பெரும்பாலும் வரலாறு நெடுக அதிகம் பயணம் செய்தவர்கள் ஆண்கள். ஆனாலும் என்னவோ அதிக கதைகள் பெண்களுக்கே தெரிந்திருக்கின்றன. தமிழ் மரபில் இறப்பின் போது பாடப்படுகின்ற ஒப்பாரியை பெண்களே வைப்பார்கள். ஒரு மனிதனின் மொத்த வரலாறையும் ஆண்களை விட பெண்களே கூர்மையாக அவதானிப்பார்கள். ஒவ்வொரு கதையும் கூர்மையான அவதானிப்பின் வடிவம். புனைவுகள் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவை. பெண்கள் கூர்மையான அவதானிகள். பெண்களின் கதைகளும் பெண் கதைசொல்லிகளும் சுவாரஸ்யமானவர்கள். அப்படியான ஒரு பெண் கதை சொல்லி குர்ரத்துலைன் ஹைதரின் பெண்ணைப் பற்றிய கதை உதிரும் இலைகளின் ஓசை.
உருது மொழிப் பின்னணியில் தமிழருக்கு முற்றிலும் வித்தியாசமான ஒன்று. உருதுமொழி பேசும் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த பெண் ஒருத்தியின் வாழ்க்கையை மையமாக வைத்துக்கொண்டு கதை நகர்கிறது. இந்த மொழிபெயர்ப்புச் சிறுகதை தமிழ் சூழலிலிருந்து விலகி – புதிய அனுபவத்தைக் கொடுப்பதற்குக் காரணம் கதையினூடாக வெளிப்படுத்தப்படுகின்ற கலாசாரப் பின்னணி. முஸ்லிம் சமூகத்தின் மீது இரண்டு வகையான விம்பங்கள் இன்று முன்வைக்கப்படுகின்றன. இன்றைய திரைப்படங்களும் ஊடகங்களும் உருவாக்குகின்ற எதிரான எதிர்மறை விம்பம் கண்டிக்கத்தக்கது. வியாபார நோக்கில் ஒற்றைப்படையாக உருவாக்கப்பட்ட விம்பம் காலம் காலமாகக் கடத்தப்படுகின்றது. எமக்கு அதிகம் தெரிந்த தமிழ் மலையாள சினிமாக்கள் இதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இப்படியான போலி விம்பம் உடைக்கப்படவேண்டும். ஆனாலும் அவர்களின் மீதுள்ள மற்றைய விம்பம் நிதர்சனமானது. முஸ்லிம்கள் தமக்கான தனித்துவ வாழ்வியல் அமைப்பை உடையவர்கள். நகரத்திலும் கிராமங்களிலும் முஸ்லீம்கள் தமது இருப்பை தனித்துவமாக வைத்திருப்பார்கள். மசூதியைச் சூழ இருப்பிடங்களை உருவாக்கிக்கொண்டு தமது பெரும்பாலான வாழ்க்கை நெறிகளை இஸ்லாம் மதத்தை சார்ந்து பழக்கப்படுத்திக்கொள்வார்கள். முஸ்லிம்கள் மிகவும் கடுமையான மதக் கொள்கைகளை கடைபிடிப்பவர்கள். சமீபத்தில் நான் கலந்துகொண்ட Women of the World Festival இல் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றிலிருந்து அறியப்பட்ட அறிந்துகொண்ட சில சம்பவங்கள் அதிர்ச்சியளித்தன. அவற்றில் முக்கியமான ஒன்றாக பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிடலாம். இலங்கையின் முஸ்லிம்கள் வாழுகின்ற பிரதேசம் ஒன்றில் பன்னிரண்டு வயது சிறுமியை, வயதான கிழவர் ஒருத்தர் துஸ்பிரயோகம் செய்திருக்கிறார். சில நாட்களிலேயே சமூகத்தினுள் பரவத் தொடங்கிய இச்சம்பவத்தை சிறுமியின் வீட்டார் அறிந்துவிட்டார்கள். மசூதிக்குச் சென்று அங்கிருக்கின்ற சமூகத் தலைமைகளின் அறிவுறுத்தலின் பின்னர் அந்த வயதான கிழவருக்கே திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அந்தச் சிறுமி கடுமையையாக துன்புறுத்தப்பட்டு கணவனைப் பிரிந்து வாழமுடியாத நிலையில் வாழ்க்கையை இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அனைத்து மதங்களும் விதிக்கின்ற அடக்குமுறைகள் பெண்களையே அதிகம் தாக்குகின்றன. இதற்கு இஸ்லாமும் விதிவிலக்கல்ல. இஸ்லாம் மதத்தின் மூலமான எல்லா அடக்குமுறையும் பெண்களின் மீதே பிரயோகிக்கப்படுகின்றது. இஸ்லாம் பெண்களுக்கு விதித்திருக்கின்ற சட்டங்கள் ஆயுள் தண்டனைக்கு ஒப்பானவை. சமத்துவம் சட்டங்கள் எல்லாம் அவர்களின் எல்லைக்கு அப்பாற்பட்டவை. இப்படியான சமூகத்திலிருந்து உருவான பெண் தன்வீர் பாத்திமா.
பாத்திமா தன் கதையினைச் சொல்வதாகவே சிறுகதை எழுதப்பட்டிருக்கிறது. பழைய நண்பி ஒருத்தியை நீண்ட காலத்திற்குப் பின்னர் பாத்திமா தற்செயலாக சந்திக்கிறாள். நீண்ட காலத்திற்கு பின்னர் நண்பர்கள் சந்தித்துக்கொள்கின்ற போது எப்போதுமே சந்தோசமான நினைவுகள் தான் ஞாபகத்திற்கு வரும். கவலைகள், கோபதாபங்கள் எல்லாம் கால இடைவெளியில் கரைந்துபோயிருக்கும். எவ்வளவு கடுமையான இறந்த காலம் இருவருக்கிடையில் இருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பின்னாலான மெல்லிய புன்னகை ஒன்று எல்லாவற்றையும் மறைத்துவிடும். ஆனால் பாத்திமாவிற்கு இவையெல்லாம் நடக்கவில்லை.
“நான் கண்ட அந்தக் கணம் இன்னமும் என்னைப் பிடித்தாட்டுகின்றது. என்னால் அதை மறக்க முடியவில்லை. அதை நினைத்தால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடுகிறது” என்கிறாள்.
இருபது வருடங்களுக்கு முன்னைய பாத்திமாவை நினைவு கொள்கிறாள். காதல், காமம், திருமணங்கள், பிரச்சனைகள், சமய ஒழுக்க மீறல்கள், உல்லாசம், பயணங்கள், வறுமை, போர் என்று எல்லாமும் பாத்திமாவின் வாழ்க்கைக்குள் புகுந்து விடுகின்றது. ஒவ்வொன்றாக அவற்றைச் சொல்லி தன்னை இந்த சமூகத்தின் முன்னே ஒப்புவிக்கின்றாள். இவ்வளவு தான் சிறுகதையா என்றால் அது தான் இல்லை.
உதிரும் இலைகளின் ஓசை 1945 களிலிருந்து 1950 இற்குள் நகர்கின்றது. பெரும்பாலான பெண்களைப் போலவே பாத்திமாவும் தன் உருவம் பற்றிய பெருமிதத்தோடு இருக்கிறாள். அத்தோடு தன் மனத் தைரியம், உணர்ச்சிக்கட்டுப்பாடு போன்றவற்றில் இறுக்கமாகவும் இருப்பதற்காகச் சொல்கிறாள். அதே போலத்தான் தனது கடந்த காலத்தையும் உணர்ச்சிவசப்படாமல் சொல்கிறாள். தஸ்தாவஸ்கியின் வெண்ணிற இரவுகளில்”உணர்ச்சிவசப்பட்ட காதற்கதை” என்று குறிப்பிட்டிருப்பார். உணர்ச்சி என்பதன் இலக்கிய வகிபாகம் பற்றிய கேள்வியினை இங்கே எழுப்பவேண்டிய கட்டாயம் உருவாகின்றது. தஸ்தாவஸ்கி வெண்ணிற இரவுகளில் குறிப்பிடுகின்ற உணர்ச்சிவசப்படும் நிலையை அவரின் பிரதியில் அவதானிக்க முடியாது. இது காலமும் வெண்ணிற இரவுகள் ஒரு நடுநிலை இலக்கியமாகவே வெளிப்படுத்தப்படுகிறது எனில் உணர்ச்சிவசப்பட்ட காதற்கதை என்பதன் பொருள் மீளக் கவனிக்கப்படவேண்டும். தஸ்தாவஸ்கி ஒரு கதையை வாசகர்களுக்குச் சொல்கிறார். அந்தக் கதை ” உணர்ச்சிவசப்பட்ட காதல் ” பற்றியது. கதை முழுக்க முழுக்க நடுநிலைமையில் தீர ஆராய்ந்தே சொல்லப்படுகிறது. இலக்கியத்தில் உணர்ச்சி என்பது வெளிப்படு பொருளாக அமையவேண்டும். உணர்ச்சிப் பெருக்கே இலக்கியமாக மாறுவது அபத்தம். உதிரும் இலைகளின் ஓசை கச்சிதமான இலக்கியப் பிரதி. வாழ்க்கையை முழுவதுமாகப் புரட்டிப்போட்ட சம்பவங்களை உதிருக்கின்ற இலைகளின் ஓசையினைப்போல மெதுவாகக் கடந்துசெல்லுகின்ற பக்குவமான நிலையில் நின்று பாத்திமா கதை சொல்லுகிறாள்.
கதை சொல்லலின் போது பாத்திமா தான் வாழ்ந்த சூழலை கட்டமைக்கின்றாள். இந்தக் கட்டமைப்பை ஒரேவீச்சில் உருவாகவில்லை. தனது வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் சொல்லும்போது, லாவகமாக தன்னுடைய சூழலை அறியப்படுத்துகின்றாள். குர்ரத்துலைன் ஹைதர் சம்பவங்களின் மூலம் களத்தின் அழகியலை வடிவமைக்கின்றார். கிட்டத்தட்ட டால்ஸ்டாய் வழிக் கதை சொல்லல் முறைமையை பின்பற்றுகிறார். தமிழ் வாசகர்களுக்கு இந்த சூழல் புதிதான ஒன்று. டெல்லியின் முஸ்லிம் சமூகத்தின் நடவடிக்கைகளை பெண்ணாக நின்று வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்திலேயே கருத்துச் சுதந்திரம், வாழ்க்கை முறைச் சுதந்திரம், மார்க்கச் சுதந்திர என எதிலும் முற்றிலுமாக பெண்கள் சுதந்திரப்படாத நிலை தான் காணக்கூடியதாக இருக்கிறது. இந்தச் சூழலை எதிர்த்து, தன் சுதந்திரத்தை வெளிப்படுத்துகின்ற பெண்கள் ஏதோ ஒரு வகையில் முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டுவிடுகிறார்கள் . இருந்தும் பெண்கள் ஏதோ ஒரு வகையில் அடக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் பாத்திமாவின் குரலாக ஒலிக்கும் குர்ரத்துலைன் ஹைதரின் குரல் அசாத்திய வலிமை உடையது. அதுவும் பொது வெளியில் தன் சமூகம் சார்ந்த குரலை எடுத்துக் கொண்டு நகர்ந்திருக்கிறார்.
” திருமண வயதை ஒட்டிய மகன்களையோ உறவுக்கார இளைஞர்களையோ உடைய பெண்கள், எல்லாப் பள்ளிக்கூடங்களையும் வலம்வந்து பெண்களைத் தேடுவார்கள் “
எல்லாக் கட்டுப்படுகளும் வறிய மக்களுக்கு மட்டுமே என்ற பொதுமையான கருத்தை தனது சமூகமும் கொண்டுள்ளது என்கிறார். தன்னை ஒரு நடுத்தர ஜமீன்தார் குடும்பப் பெண்ணாக அடையாளப்படுத்தும் பாத்திமா, எளிமையாக வசதியான குடும்ப ஆண்களிடம் மயங்கிப்போவதையும் தான் சாதியில் உயர்ந்த ஆண்களைத் திருமணம் செய்வதன் மூலம் உயர் சாதியில் அடைந்துவிடுவேன் என்றும் நினைத்துக்கொள்கிறாள்.
இந்தப் பேதமையில் ஒரே மூச்சில் அகன்றுவிடாது. அதற்கு எடுக்கின்ற காலம் பற்றிய பிரக்ஞையுடனேயே கதையினைச் சொல்கிறாள்.
அவளின் முதல் காதலன் திருமணம் செய்யக் கேட்கும்போது எப்படி அவளின் சமூகத்தை எதிர்த்து பேசினாளோ அதே அளவு வீரியத்துடன் சமூக ஒழுக்கங்கள் பற்றி சாதகமாப் பேசுகிறாள். பொதுமையில் பார்க்கப்போனால் நிதானமற்ற நிலை போலத் தோன்றினாலும், பாத்திமா முழுக்க முழுக்க ஆடம்பர வாழ்க்கையின் மோகத்திற்க்காகவே அவனை வெறுக்கிறாள் என்று ஆழமான வாசிப்பின் மூலமும் புரிதல்களின் மூலமும் அறிந்துகொள்ளலாம்.
அதன்பின் விதியின் வசம் மாட்டிக்கொள்கிறாள். வசதியான வாழ்க்கையை விரும்பி இரண்டு காதல்கள் முறிந்து மூன்றாவது காதலில் மிகவும் சாதாரணமாக மாறுகிறாள். ஒரே வரியில் துயரங்கள் அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிடுகிறாள்.
” இறைவனுக்கு முன்னால் அடிபணிந்து வணங்கும் போது வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போல ஒரு பைத்தியக் காரத்தனமான ஆசை எனக்குள் எழும் ” என்கிறாள்.
ஆனால் சீக்கிரமே வாழக்கையில் யதார்த்தத்தையும் உணர்ந்து கொள்கிறாள்.
“உங்களுடைய விதியில் நீங்கள் திருப்தி அடைய முடிந்தால் தானாகவே நீங்கள் பலவிதமான துன்பங்களிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.”
கதையில் லாவகமான குறியீடு ஒன்றை குர்ரத்துலைன் ஹைதர் பாவிக்கின்றார்.
“ அந்த நாட்களில் ‘ ஒரு மாதிரியான பெண்கள்‘ இருவரைப் பற்றிய கதைகளும், அவர்கள், ஆண்கள் பின்னால் அலைந்தார்கள் என்பதும் அவர்கள் எப்படித் தங்கள் நவநாகரிகமான பெற்றோர்களை முட்டாளாக்கினார்கள் என்பதையும் பற்றிய பேச்சே டெல்லி முழுவதும் இருந்தது.”
இதில் வருகின்ற “ஒரு மாதிரியான பெண்கள்“ இருவரைப் பற்றிய உரையாடல் பாத்திமாவிற்கும் நண்பர்களுக்குமிடையிலான உரையாடலின் போது ஏற்படுகின்றது. அதே சமயத்தில் தான் பாத்திமா முதல் காதலிலும் வீழ்ந்திருந்தாள். இந்த உரையாடலில் ஒரு மாதிரியான பெண்களை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். மிகத் தெளிவான நியாயப்படுத்தல் ஒன்றினை அவர்களுக்குள் முன் வைக்கின்றார்கள். இந்தப் பெயர், ஆண்களின் பின்னால் அலைந்ததால் உருவாகியது என்பது பொய்யென்றும்,
“உண்மையான விஷயம் என்னவென்றால், நாகரிகமான, படித்த பெண்களை ஏறிக்கொள்ள நமது சமூகம் இன்னமும் தயாராகவில்லை” என்றும் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால் திட்டவட்டமாக ஆண்களுக்குப் பின்னால் அலைதல் என்பதையோ ஒன்றுக்கு மேற்பட்ட முறை காதல் கொள்ளல் என்பதையோ எதிர்க்கிறார்கள். பாத்திமா தனது கதை சொல்லலின் ஆரம்பப் பகுதிகளில் உருவாக்குகின்ற இன்னொரு கருத்தியல் பரப்பு இது. இதைப் போல ஆரம்பத்திலேயே தோராயமான சிந்தனைகள் பலதை உருவாக்குகின்றாள். ஆனால் காலத்தோடு, அனுபவங்களோடு ஒவ்வொன்றையும் மறுதலிக்கின்றாள். வாழ்க்கையின் ஆரம்பகாலக் கோட்பாடுகள் படிப்படியாக வலுப்பெறுவதாகவும் அல்லது உடைந்து இன்னொரு கோட்பாடு மேலெழுவதும் சாதாரணமானது. சமூகம் பற்றிய புரிதல்கள் காலத்தோடு அதிகரிக்கவேண்டும். உணர்வு நிலையிலிருந்து சமூகத்தை அவதானிப்பது குறைந்து பகுத்தறிவோடு அணுக வேண்டும். பாத்திமா இதே வழியினை கடைபிடிக்கின்றாள். தன் ஆரம்ப கால கதையிலிருந்து தற்போதைய நிலைமை வரை கதை சொல்லும் போது, அவளின் அணுகுதல் முறை அடைந்த வளர்ச்சி தெளிவாகப் புலப்படுகிறது. வாழ்க்கை என்பது வாழ்தலுக்கான வெளி என்ற சிந்தனை காலத்தோடு வலுப்பெறுகிறது.
பாத்திமாவின் நிச்சயம் இல்லாத வாழ்க்கையினை குர்ரத்துலைன் ஹைதர் கதை ஓட்டத்திற்கு பயன்படுத்துகிறார். எந்தக் கணத்திலும் எப்படியான மாற்றங்களும் நிகழ்ந்துவிடக்கூடிய அவளின் வாழ்க்கை, கதை சொல்லலுக்கும் கதையின் கருவினை கடத்துவதற்கும் உதவியாக அமைகின்றது.
குர்ரத்துலைன் ஹைதரின் கதைகளை மீண்டும் தமிழ் சூழலுக்கு கொண்டு வந்து உரையாடவேண்டிய கட்டாயம் உணரப்படுகின்றது. உதிரும் இலைகளின் ஓசை மூலம் தெளிவுபடுத்தப்படுகின்ற வாழ்க்கை பற்றிய அறிதல் முறைமைகள் உரையாடல்களும் விவாதங்களும் எங்கள் சமூகத்தினிடையே உருவாக்கப்படவேண்டும்.