எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய மிகவும் முக்கியமான பல இலக்கிய உரைகள் இருக்கின்றன. எஸ்.ரா ஒரு எழுத்தாளர் என்பதைத் தாண்டி முக்கியமான பேச்சாளரும் கூட. அவர் ஆற்றிய உலக இலக்கியங்கள் தொடர்பான உரைகள் பிரசித்திபெற்றவை. கிரேக்க நாடகங்களை பற்றி கிரேக்க நாடக புத்தக விழா ஒன்றில் பேசியபோது, அவரின் பரந்த அறிவை வியந்திருக்கிறேன். அப்படியான சிறந்த உரையொன்றை சமீபத்தில் புத்தக திருவிழாவின் போது ஆற்றியுள்ளார். “ நான் வாசித்த நாவல்கள் “ என்பதே தலைப்பு. ஆத்மார்த்தமான உரையாக இது அமைந்திருந்தது. நாவல்களின் முக்கியத்துவத்தையும், இன்னும் எழுதப்படாமல் இருக்கின்ற கருக்கள் பற்றியும், நாவல் வாசிப்பின் வீழ்ச்சி பற்றியும் ஈழத்து போர் இலக்கியங்கள் பற்றியும் பேசியிருந்தார். எழுத்தாளன் என்ற உணர்வுடன் அவர் பேசிய வார்த்தைகள் அர்த்தம் மிக்கனவாக இருந்தன. சுதேசிய இலக்கியங்களின் அவசியம் பற்றிய ஆழமான கருத்தை முன்வைத்திருந்தார். ஒவ்வொரு மண்ணும் ஒவ்வொரு நிலமும் இலக்கியம் மூலமாகவே தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. வரலாற்றை எழுதவேண்டியவர்கள் வரலாற்றில் வாழ்பவர்களே என்ற அடிப்படை வாதம் அவரின் சில சொற்களில் தெரிந்தது. உலக மேடைகளில் இன்னும் அங்கீகரிக்கப்படாத ஒரு எழுத்தாளனின் குரலாக அவரது உரை அமைந்திருந்தது.
உரையின் முழு வடிவம் Shuruthi TV யினரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது ம் பேசியிருந்தார். எழுத்தாளன் என்ற உணர்வுடன் அவர் பேசிய வார்த்தைகள் அர்த்தம் மிக்கனவாக இருந்தன. சுதேசிய இலக்கியங்களின் அவசியம் பற்றிய ஆழமான கருத்தை முன்வைத்திருந்தார். ஒவ்வொரு மண்ணும் ஒவ்வொரு நிலமும் இலக்கியம் மூலமாகவே தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. வரலாற்றை எழுதவேண்டியவர்கள் வரலாற்றில் வாழ்பவர்களே என்ற அடிப்படை வாதம் அவரின் சில சொற்களில் தெரிந்தது. உலக மேடைகளில் இன்னும் அங்கீகரிக்கப்படாத ஒரு எழுத்தாளனின் குரலாக அவரது உரை அமைந்திருந்தது.
உரையின் முழு வடிவம் Shuruthi TV யினரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Category Archives: Common – பொது
புதிய சொல். – ஈழத்து இலக்கிய சிற்றிதழ்.
ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் முயற்சியில் புதிய சொல்லை முக்கிய படைப்பாகக் கருதுகின்றேன். காலாண்டு இதழாக வெளிவருகின்ற புதிய சொல் இதுவரை தனது ஆறு இதழ்களை வெளிக்கொண்டுவந்திருக்கின்றது. ஆறாவது இதழ் இந்தவருடம் ஜூலை மாதம் வெளிவந்திருக்கின்றது. இந்த இதழ் ஏப்ரல் – ஜூலை காலாண்டிதழ்.
சமகால இலக்கிய சூழல் என்கிற வரையறைக்குள் இருக்கின்ற சமூகத்தின் இயக்கம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் எனக்கு இருக்கின்றது. சமகால ஈழத்து எழுத்தாளர்களின் செயற்திறன் எல்லை மிகக் குறுகியதாகவே இருக்கின்றது. அவர்களின் செயற்பாட்டு எல்லைக்கு வெளியே சென்று சாதாரண சமூகத்தினரிடம் இலக்கியத்தை கொண்டு சேர்க்க முடியாமல் உள்ளது. படைப்பாளிகளையும் அவர்களின் வாசகர்களையும் தவிர ஏனையோருக்கு ஒரு இலக்கியப் பதிவு போய்ச்சேருவது மிக மந்தமாக இருக்கின்றது. இந்தியாவிலும் இலங்கையிலும் ஏறத்தாள இதே நிலைதான். எழுத்தாளர்கள் ஒரு பக்கம் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஏதோ எழுத்தாளர்கள் அனைவரும் தமது வயிற்றுப் பிழைப்புக்காக எழுதிக்கொண்டு இருப்பது போல சாதாரண மக்கள் அவர்களை கடந்து செல்கின்றார்கள். அவர்களின் தனித்த படைப்புக்கள் வெளிவருகின்றபோதும் இதே நிலை தான். அது ஒரு புறம் இருக்க, இன்றைய சிற்றிதழ்களின் நிலையை கவனிக்க வேண்டும். அதிலும் ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் மிக குறுகிய வாசிப்பு வட்டத்தையே கொண்டிருக்கின்றன. நலிந்த வாசகர்களைக் கொண்டு ஒரு இலக்கிய சிற்றிதழை நடத்துவது என்பது மிகக் கடுமையான காரியம். இதனாலேயே பல சிற்றிதழ்கள் இன்றைய சமூகத்திலிருந்து வழக்கொழிந்து போயிருக்கின்றன.

அந்த வகையில் புதிய சொல்லில் தற்போதைய நிலைமை ஓரளவுக்கு ஈழத்து சிற்றிதழ் நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக இருக்கின்றது. அதற்கு இன்னொரு முக்கியமான காரணம் புதிய சொல்லின் செயற்பாட்டுக் குழு இளைஞர்களாக இருக்கின்றமை. அவர்களின் தீவிர பரப்பு நடவடிக்கைகள் புதிய சொல்லில் இருப்புக்கு வழி செய்கின்றது. அதே போல புதிய சொல்லில் வெளிவருகின்ற ஆக்கங்களின் புதுமைத்தன்மையும் ஒரு காரணம். என்னதான் எத்தனை புதுமைகளைச் செய்தாலும் வாசிப்பு வட்ட விஸ்தரிப்பு இன்றி நிலைக் கொண்டுவிடமுடியாது. பொழுதுபோக்கு இதழுக்கு ஏற்படுத்தக்கூடிய வாசிப்பு வட்டத்தின் அளவை ஒரு போதும் இலக்கிய சிற்றிதழ்கள் ஏற்படுத்திவிடமுடியாது. இது சம்பிரதாயம். ஆனால் வாசிப்பு ஊடகத்தை பரவலாக்குவதன் மூலம் இதைச் சாத்தியப்படுத்தலாம்.
எனக்கு புதிய சொல்லின் ஆசிரிய குழுமத்தை தெரிந்துகொள்வதற்கு முதலே புதிய சொல்லை தெரிந்தும் வாசித்தும் இருந்தது புதிய சொல்லில் வாசிப்பு விஸ்தரிப்பின் எழுச்சியான போக்கைக் காட்டியது. பல சிற்றிதழ்களை வற்புறுத்தித் திணித்தி அனுப்புகின்ற சூழலில் தனக்கென வாசகர் பரப்பை குறுகிய காலத்தில் புதிய சொல் ஏற்படுத்தியிருப்பது அவர்களின் வெற்றி. அதைத் தொடர்ந்து தக்கவைத்துகொண்டிருப்பது இலகுவானதல்ல. அதையும் கருத்திற்கொண்டு செயற்படவேண்டும்.
புதிய சொல் 06
எப்போதுமே புதிய சொல்லில் அட்டைப்படம் ஆழ்ந்த குறியீட்டு மொழியிலேயே இருக்கும். இந்தமுறையும் நல்லையா சவேசனின் கைவண்ணத்தில் child art முறையில் அரசியல் – பாலியல் – வன்முறைகள் அடிப்படையில் வரையப்பட்டு பிரசுரிக்கப்ட்டிருக்கின்றன. ஆசிரியர் குறிப்பில் உரையாடல்களுக்கான தளத்தை ஏற்படுத்தி, அதிலிருந்து இலக்கிய வளர்ச்சிக்கான அழைப்பை தொடர்ந்து விடுத்துக்கொண்டே இருக்கிறார். இருந்தும் முன்னைய இரண்டொரு இதழ்களில் நான் கண்ட வாசக இலக்கிய வாத பிரதிவாதங்களை இதில் காணாதது கவலையே. அதற்கான அழைப்பும் ஆசிரியர் குறிப்பில் விடுக்கபடுகின்றது.
புத்தகாயம் – இராகவன் ,துயர் மிகு இருள் – தீபன் சிவபாலன் , ஒழுங்குபடுத்தலின் வன்முறை – அருண்மொழிவர்மன் , Silence in the Courts அதிகாரத்தின் துஷ்பிரயோகம் – அத்தியா , காலங்களை கண்களில் நிரப்பியவன் – அனார் , மக்ரலின் அறுபதாயிரம் புறாக்கள் – யதார்த்தன் , சோலையூர் காண்பியக்காட்சி பற்றிய ஒரு பார்வை – தனுசியா , சல்வீனியா – தர்மு பிரசாத் , விளமீன் – ஜே கே , சாக வாய்க்காத நாட்கள் – நபீல் ,நான்கு காட்சிகள் ஒரு கவிதை – கேயல்.நப்லா , நட்சத்திரங்கள் சேகரிப்பவள் , கையகராதிப் பதிப்பு வேறுபாடுகள் – விருபா குமரேசன் , சினிமா வட்டங்களும் ஓர் இயக்கமும் – அனோஜன் பாலகிருஷ்ணன் , விடுபடல்களில் இருந்து தவிர்க்க முடியாமைக்கு – எஸ்.சத்தியதேவன் என கட்டுரைகளும் கவிதைகளும் சிறுகதைகளும் உள்ளடங்கலாக புதியசொல் 06 வெளிவந்துள்ளது.
இறுதி உள் மட்டையில் தொன்மையாத்திரை என்ற நிகழ்வு சம்பந்தமான புகைப்பட ஆவணப்படுத்தலும் சிறுகுறிப்பும் உள்ளது.
மற்றைய புதிய சொற்களுடன் ஒப்பிடும் போது இது பௌதீக அளவில் குறுக்கம் உடையதாக இருக்கின்றது கவலை அளிக்கின்றது. அத்தோடு இந்த இதழில் கட்டுரைப் பல்வகைமை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதும் கவலையே.
எல்லா இலக்கிய ஆர்வலர்களும் , சாதாரண மக்களும் புதிய சொல்லை வாசித்து அறிந்து பகிர்ந்து கொள்ளுதல் இதழின் வளர்ச்சி என்பதைத் தாண்டி ஈழத்தில் சிற்றிதழுக்கான அங்கீகாரத்தையும் அவர்களுக்கான சரியான தளத்தையும் அமைத்துக்கொடுக்கும் என நம்புக்கின்றேன்.
அதே போல இந்த இதழில் உள்ள கட்டுரைகள் அதன் மையம் அடிப்படையில் அடுத்தகட்ட விவாதத்திற்கு உரியவை. ஆசிரியர் குழு அதற்கான ஆவலுடன் இருப்பதும் தெரிகின்றது. வாசகர்கள் அவர்களின் வாதப்பொருளையும் வாதங்கள் பிரதிவாதங்களையும் முன்னகர்த்திச் செல்லவேண்டியது மேலும் அவர்களுக்கு ஊட்டம் அளிக்கும் என திடமாக நம்புகிறேன்.
புதிய சொல் குழுமத்திற்கு வாழ்த்துக்களும் அன்பையும் பரிமாறிக்கொள்கிறேன்.
குட்டை குடிநீர் – 03
தமிழ் இலக்கிய சூழலில் இன்று நின்று நிதானித்து வாசித்து கடக்கின்ற போக்கு அருகிப்போய் விட்டது. இதை எந்த கட்ட வாசிப்பு அல்லது இலக்கிய நிலை என்று கூறுவது சிரமம். ஒரு வகையில் வாசகனின் நேர முகாமைத்துவம் நேரடியான தாக்கத்தை செலுத்தினாலும் வாசகன் செலவு செய்கின்ற வீண் பொழுதுகளை கணக்கிடும் போது நேர சிக்கல் என்பது பொருட்டல்ல என்றே தோன்றுகின்றது. வாசிப்பு பரவலாக்கம் இன்று வியாபித்துப்போய் இருந்தும், வாசிப்பிற்க்கான ஊடகங்கள் அதிகரித்துபோயிருந்து வாசிப்பு மட்டம் மிக தாழ்வாகவே உள்ளது. வரலாற்று ரீதியில் இதை நியாயப்படுத்தும் ஆராய்ச்சியாளர்கள் உலக வாழ்வில் எந்த காலகட்டத்திலும் இதே போன்ற ஒரு குவிய வாசிப்பு பண்பாடு தான் இருந்திருகிறது என்கிறார்கள்.இந்த குவிந்த வாசிப்பு பண்பாடு முன்னைய காலகட்டத்திற்கு ஒரு சவாலாக இருக்கவில்லை. அன்றைய சமூக ஒழுங்கமைப்பில் வாசிப்பின் பங்கு கணிசமாக இருந்தாலும் வாசிப்பு பரவலாக்கம் ஒரு பெரிய பொறிமுறையாக தேவை இல்லாமல் இருந்தது. பல புரட்சிகளுக்கு வாசிப்பு அனுபவத்தின் தேவை அதிகமாக இருந்திருக்கவில்லை. அக்கால சூழலிய கட்டமைப்புக்கள் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. புரட்சிக்கான விதை சமூகத்தாலே விதைக்கப்பட்டது.
இன்றைய சூழ்நிலையில் இது எல்லாம் சாத்தியமா என்ற கேள்விக்கான பதிலளிப்பிலே வாசிப்பின் பரவலாக்கத் தேவைக்கான அவசர அவசியம் உணரப்படும். தினசரி வாழ்கையில் நடக்கின்ற சம்பவங்களும் அதன் பின்னணிகளும் தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தின் மீதான கேள்விக்குறியை ஏற்படுத்துகின்றது. எம்மிடையே பரவிக்காணப்படுகின்ற மந்தமான சுய பகுத்தறிவு இதற்கு முக்கிய பங்கை ஆற்றுகிறது. ஒரு பிரச்சனையை அல்லது ஒரு நிகழ்வை பகுத்து ஆராய்ந்து ஆலோசித்து முடிவை எடுக்கின்ற சாதாரண மனிதப்பண்பு கூட இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது. சூழ்ந்துள்ள சமூகம் அதற்கான எந்த வாய்ப்புகளையும் வழங்குவதில்லை. ஏனென்றால் அவர்களும் இதே மந்த கோட்பாட்டு வாழ்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் இதே சூழலிய பிரச்சனை உங்களால் உருவாகிக்கொண்டு இருக்கும்.
இதற்கான தீர்வு எது என்பதை சிந்தித்துப் பார்க்கின்ற ஏற்பாடு எங்களிடையே இல்லை. அதற்கு முன்னர் சிந்தித்து கொள்வதற்க்கான கருத்தியலையும் அனுபவங்களையும் நாங்கள் திரட்டி கொள்வதில்லை. இந்த கருத்தியலையும் அனுபவங்களையும் நூல்களில் இருந்து பிரித்து எடுத்து வாழ்க்கைக்கு பிரதியீடு செய்து வாழ்ந்து பார்த்தல் என்ற பேச்சிற்கே இன்று இடம் இல்லாமல் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இன்றைய பாடசாலையும் சமூகமும் குடும்பமும் வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதில்லை. மாறாக இன்னும் இழிய நிலைக்கு கொண்டு செல்வதில் ஆர்வமாக உள்ளார்கள். டெங்கிற்கு ஒலிபெருக்கிமூலம் அறிவுறுத்தி தண்டப்பணம் செலுத்தச் செய்வது போன்று கண்டிப்பாக வாசிக்க வைக்க அரசாங்கம் சட்டம் அமுலாக்குதலின்றி இந்த சமூகம் விரைவில் எதிர்கொள்ளப்போகும் உயிர்கொல்லி நோய்க்கு வேறு மருந்தில்லை.
தமிழ் சமூகமும் தமிழ் திரைப்படங்களும் – 01
இன்றைய தமிழ் சூழலின் வடிவமைப்பில் திரைப்படங்களின் வீச்சு மிக கூர்மையானது. இன்றைய பண்பாட்டு பரவலாக்கம் காரணமாக ஒரு சமூகத்தின் அனைத்து கூறுகளும் எல்லா சமூகத்தினரும் அவதானிக்க கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இந்த அவதானங்களின் மையப்பொருளாக, ஒரு சமூகத்தின் அடையாளாமாக எடுத்தாளப்படுகின்ற திரைப்படங்கள் தமிழ் சமுதாயத்தின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கம் அசாத்தியமானது. எந்த சமூக ஊடகமும் அடைய முடியாத ஆழத்தையும் பரவலாகத்தையும் கற்று அறிந்த சமூகத்தில் தொடங்கி மேற்தட்டு மக்கள் நடுத்தர வர்கத்தினர் விளிம்புநிலை மக்கள் ஏழை வறியவர்கள் வரையும் வயது இன மொழி ஜாதி வேறுபாடின்றி தமிழ் திரைப்படங்கள் அவர்களுக்குள் ஒரு அங்கமாக அவர்களையும் அவர்கள் சார்ந்த சமுதாயத்தையும் வடிவமைக்கின்ற அல்லது வடிவமைக்கப்பட்ட சமுதாயத்தில் மாற்றத்தை உண்டு பண்ண கூடிய சக்தியாக உருவெடுத்து விட்டன.
பார்த்து உணர்ந்து சிந்தித்து பிரித்தறிதல் என்ற சாதாரண மனித செயற்பாடுகளுக்கு எந்த கஷ்டமும் கொடுக்காமல் பார்த்ததை அமுல்படுத்தல் என்ற கொடிய செயற்பாட்டு தளத்தில் இயங்கும் அளவிற்கு இன்றைய மக்கள் தமிழ் திரைபடங்களிடையே கொண்டிருக்கின்ற பற்றுதல் மிக கேவலமான சமூகத்தின் அடையாளம். இதற்கு காட்சிகள் உருவாக்குகின்ற நியத்தன்மை பொருந்திய மாய சினிமா உலகம் ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தும் திரை நிய வாழ்வியலை பிரித்தறிய முடியாத அளவு திரைபடங்கள் தமிழ் சமுதாயத்திற்குள் ஊடுருவி விட்டன.
தமிழ் சிறுகதை முன்னோடிக்கு வாழ்த்துக்கள்.
இன்று எல்லோருமே சிறுகதை உலகத்திற்குள் நுழைந்து விட்டார்கள். எல்லோருமே சிறுகதைகளை எழுதவும் விமர்சிக்கவும் தொடங்கியிருகிறார்கள். சிறுகதைகள் ஏதோ ஒரு வகையில் அனைவரையும் சென்றடைந்து விட்டது. இதனால் சிறுகதைகள் சந்தையில் மலிந்து போய் விட்டது. தரமாக வருகின்ற சிலதும் கஞ்சலுடனே இல்லாமல் போகின்றன. இப்படியான துர்ப்பாக்கிய நிலை இன்றைய சிறுகதைகளுக்கு ஏற்பட்டு விட்டது. அதேபோல எப்போதும் ஊதுகின்ற சங்குபோல முன்னோடிகளை வாசிக்கவும் விமர்சிக்கவும் வாழ்த்தவும் மறந்து விடுகின்றோம்.
இன்று தமிழ் சிறுகதைகளின் முன்னோடியான சோ. விருதாசலம் என்கின்ற புதுமைப்பித்தன் பிறந்த நாள். தமிழ் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன். அவர் வாழ்ந்த நாப்பதிரண்டு வருடங்களில் பதினைந்து வருடங்களே இலக்கிய பணியில் ஈடுபட்டார். வறுமையை கருவாக கொண்டே ஆரம்ப கால சிறுகதைகளை வீரியமாக எழுதினார்.மணிக்கொடியின் ஆசிரியாக இருந்தவர் அவரின் பெரும்பாலான கதைகளை மணிக்கொடியிலேயே பிரசுரம் செய்தார். நாற்பத்தி ஐந்து கதைகள் வாழும் காலத்தில் பிரசுரமாகியும் நூற்றி இரண்டு கதைகள் மொத்தமாக அவரின் இறப்புக்கு பின்னர் தொகுக்கப்பட்டும் உள்ளது.சிறந்த இலக்கிய விமர்சகராகவும் நாடக எழுத்தாளராகவும் இருந்திருகின்றார்.
ஒரு சாதாரண விழுமிய குடும்பத்தின் வாழ்வியல் சிக்கல்கள் , மனிதர்களிடையே பரவியிருந்த மூட நம்பிக்கைகள் , என சிறுகதை கருக்களை அதிகமாக கையாண்டுள்ளார். அவரின் மிகச்சில கதைகளையே வசித்திருகின்ற படியால் விரிவாக எழுத முடியாமல் உள்ளது. விரைவில் புதுமைப்பித்தன் பற்றிய பதிவொன்று நீளமாக நிறைய தகவல்களுடன் பதிவிடுவேன்.
தமிழ் சிறுகதைகளின் முன்னோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவரின் சிருகதைகளை வாசித்துகொள்ள இந்த சுட்டி உதவும்
Click Here
என் சில இரவுகளின் கள்வனுக்கு பிறந்தநாள்.
வாசிக்க தொடங்கிய ஆரம்பத்தில் பல எழுத்தாளர்கள் அவர்களின் ப்லோக்ஸ் மூலமாகவே அறிமுகமானார்கள். அவர்களில் எஸ். ராமகிருஷ்ணனும் ஒருவர். வாசிக்க தொடங்கிய காலத்தில் யார் எவர் என்று இல்லாமல் எல்லோரையும் தின்றுகொண்டிருந்தேன். இன்றும் கூட. எஸ்.ரா இன் படைப்புக்களில் ஆரம்பத்தில் வாசிக்க தொடங்கியது அவரது சிறுகதைகள். அவரது சிறுகதைகள் வாசிக்க எளிதாகவும் , விளங்கிக்கொள்ள சிரமம் அற்றதாகவும் இருந்ததால் என்னை ஈர்த்துக்கொண்டது. அவரது ப்ளோகில் இருக்கின்ற பெரும்பாலான சிறுகதைகளை ஒரே இரவில் வாசித்து முடித்தேன். கதையின் கருவை வாசகனுக்கு விளித்துக்கூறுவதில் எஸ்.ரா மிக திறமையானவர். அப்போது உயிர்மெய் இதழில் வெளியான சீட்டாட்டம் என்ற சிறுகதை தான் எனக்கும் அவருக்குமான முதல் தொடர்பு. இதை அவரது ப்ளோகில் பிரசுரித்திருந்தார். அதற்கு பின்னரான இரவில் தான் அவரின் சிறுகதை உலகிற்குள் சஞ்சரித்திருந்தேன். நாக்கு வலிக்காமல் கண் நோகாமல் அனைத்தையும் வாசித்து முடித்தேன். எல்லா கதைகளிலும் எஸ்.ரா என்னும் கதைசொல்லி என்னூடே இருந்துகொண்டிருந்தார். அப்படி அன்னியோன்யமாக கதைகள் இருந்தன.
இன்று எஸ்.ராவை வாசிக்கும் போது எழுத்தின் மீள்மை தென்படுகிறது ( Repetitive Writing).தன்னை சார்ந்தோரை வலிந்து எழுதுகின்ற பழக்கம் இவருக்கு பின்னடைவே. இருந்தும் இன்றும் அவரின் எழுத்துக்கள் காயப்படுத்தாதவையாகவே இருப்பது ஆச்சரியமே. எஸ்.ரா என்னும் ஆளுமை என்னால் எந்நாளும் நினைவுகூறக்கூடிய எழுத்தாளர்களில் ஒருவர். இன்று பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு வாழ்த்துக்கள்.
குட்டை குடிநீர் – 01
உலகில் எந்த அணுவும் முயற்சி இன்றி இடம்பெயராது. சுய முயற்சியோ உந்துதலோ எதுவானாலும் சரி, முயற்சி என்ற சக்தி அங்கு பரிமாற்றப்படவேண்டும். இந்த சக்தி பரிமாற்றம் நிகழவில்லை என்றால் எந்த ஒரு விடயத்திலும் தேக்க நிலை ஏற்பட்டு விடும். ஒவ்வொன்றும் ஆங்காங்கே தேங்கிப்போனால்! தேக்கநிலை வாழ்வியல் உண்டாகும். பின்செல்லல் என்பதை விடுத்து தேங்கிநிற்றல் என்ற நிலை கருதுவோம். முன்னோ பின்னோ நகராத நிலை. பெரிய மைதானத்தில் கால்கள் அற்ற வெளியில் வைக்கப்பட்ட உதைப்பந்து போல. அதற்கும் கால்கள் இல்லாமல் உதைக்கவும் கால்கள் இல்லாத நிலை. இதை ஆராய்தல் காலக்கட்டயம். தேக்க நிலையின் விளைவுகள் கொடூரமானது. உங்கள் ஆளுமையையும் அடையாளங்களையும் இல்லாமலே ஒழித்து விடக்கூடிய வல்லமை நிறைந்தது. உங்கள் விம்பங்களை மங்கச்செய்து கண்ணாடிகளை கரும்பலகைகள் ஆக்கி அதன் மொழிகளை எழுதத்தொடங்கிவிடும் தேக்கங்கள். எழுத்தாளர்களும் இதற்க்கு விதிவிலக்கல்ல.
இன்றைய சூழ்நிலையில் எழுத்தாளர்கள் கவனிக்கப்படுவதில்லை, எழுத்துக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை அவருக்கான மதிப்பு கிடைக்கப்பெறுவதில்லை என்று ஓயாமல் ஓலமிட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த ஓலத்தின் பின்னணி அடுத்து நாமும் கவனிக்கப்படமாட்டோம் என்பது தான். என் அடையாளங்கள் யாரோ பத்து பேருடன் முடிவடைந்து போகப்போகிறது என்ற பயத்தில் தான். அந்த பத்து பேரை ஒரு நூறு பேருக்கு தெரியுமென்றால் அதில் நான் ஐந்து பேருக்கு தான் கடத்துப்பட்டிருப்பேன். இது தான் நிதர்சனம். காலம் காலமாக காக்கவேண்டிய இலக்கியங்கள் எல்லாம் இரண்டு தலைமுறைகளுடனேயே முடிந்து போகின்றது என்பது கவலை தான். இதை எல்லாம் எண்ணிக்கவலைப்படும் எழுத்தாளர்கள் இதற்காக என்ன வழி செய்தோம் என்று சிந்திக்கவேண்டிய நிலைமை கட்டாயமாகிறது.
இன்றைய நூறு பேரில் தொன்னூறுபேர் எழுத்தாளர்கள் தான். மற்றைய பத்துபேர் எழுத வாசிக்க தெரியாதவர்கள். இந்த தொன்னூறு பேரில் ஏன் ஒருவர்கூட மூன்றாம் தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை? ஏன் என்றால் தொன்னூறு பேரும் தொன்னூறு திசைகளில் இருக்கிறார்கள். யாரும் யாரையும் கவனிப்பதில்லை. அருகில் இருப்பவன் எழுதுகிறானா என்ற விழிப்புக்கூட இருக்காது. ஆனால் இருவரும் எழுதிக்கொண்டே இருப்பார்கள். இந்த இடத்தில் தான் தேக்க நிலை உருவாகின்றது. தேக்க நிலை எழுத்துக்களின் வலிமை மிக கொடியது. தன்னையும் அழித்து சுற்றத்தையும் அழித்துவிடும். நாங்கள் யாரையும் சிரத்தையுடன் வாசிப்பது கிடையாது. வாசித்தாலும் அதற்கான நேர் மறை விமர்சனங்களை முன்வைப்பது கிடையாது. எந்த சாராரும் இதே நிலைதான். கடுமையான , முகம்சுளிக்க வைக்கும் விமர்சனங்கள் தான் செதுக்கு உளிகள். அடுத்த இடம்பெயர்வுக்கான விசை அதிலிருந்து தான் பெறப்படுகின்றது. டால்ஸ்டாயும் செக்காவும் கார்கியும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொள்வார்கள். அவர்களின் ஒவ்வொரு அடுத்த படைப்பும் இன்னும் செம்மையாக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. அடுத்த எழுத்தின் மீதான அதீதம் அவர்களை சூழ்ந்து கொண்டது. இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ஒருவர் இறந்த பின் மற்றோருவர் இறந்தவரின் படைப்பை அடுத்த தளத்திற்குக்கொண்டு சென்றார். இந்த ஆரோக்கியமான புரிதலுடன் கூடிய விமர்சனங்கள் எம்மத்தியில் அறவே இல்லை. இருக்கின்றவை கவனிப்பாரில்லாமல் ஆறு விமர்சகர்கள் காரசாரமாக விமர்சிக்க ஐந்து கேட்போர் தலையாட்டிவிட்டு போகும் துர்ப்பாக்கியநிலை மேலோங்கிவிட்டது. இந்த நிலை மாற்றப்படவேண்டும். எழுத்துக்கள் தேக்கநிலையை அடைத்துவிடக்கூடாது. கவனிப்போர் இல்லாத இலக்கியக்கூட்டங்கள் திருவிழாக்கள் ஆக்கப்படவேண்டும். எழுத்துக்கள் பாரபட்சம் இன்றி விமர்சிக்க படவேண்டும். விமர்சனங்கள் தான் தேக்கநிலை எழுத்துக்களை இல்லாமல் ஒழிக்கும். ஒரு எழுத்தாளன் வாழும் போது விமர்சிக்கப்படவேண்டும். இல்லாமல் போனபின்பு அர்ச்சிக்கப்படவேண்டும். அவரின் எழுத்துக்கள் காலமெல்லாம் கடத்தப்படவேண்டும்.
எழுத்தாளின் அஞ்சலி
அசோகமித்திரனுக்கு அஞ்சக்கூட்டம் நேற்று ( 31.03.17 ) மைலாப்பூரில் கவிகோ மன்றில் நடந்தேறியது. எழுத்தாளர்கள் பலர் கலந்துகொள்வதற்காக இருந்ததால் நிகழ்வு மீதான பார்வை எனக்கு இருந்தது. சில நாட்களுக்கு முன்னர் மனுஷின் முகப்புத்தக பதிவில் , ” இன்று மாலை கவிக்கோ மன்றத்தில் ‘’ driving experiences of a tamil writer எனற பொருளில் ஒரு இலக்கிய பேருரை ஆற்றுகிறேன். அது நிச்சயம் உங்கள் முதுகுத்தண்டை சில்லிடச் செய்வதாக இருக்கும் தவறாமல் கலந்து கொள்ளவும் ” என்றிருந்ததில் இருந்து சற்று ஆவலாகவே காத்திருந்தேன். மணி 11 க்கு யூடூப்பில் காணொளி பதிவிடப்படும் என அறிவிப்பு இருந்தது. இருந்தும் இன்று காலை தான் என்னால் பார்க்க முடிந்தது.
எழுத்தாளர் சமூகத்தின் ஒட்டுமொத்த குரலாக அந்த உரை இருந்தது. ஒவ்வொரு எழுத்தாளனினதும் ஏதோ ஒரு கருத்தியலிலாவது அவருடன் உடன்பட்டு போகும் என்பது எனது எண்ணம். பொதுவாக எழுத்தாளர்களை இருட்டின் நடுவில் தீக்குச்சி அல்லது மெழுகுவர்த்தி என புகழ் பாடுவதுண்டு, – எழுத்தாளர்களே. ஆனால் நிதர்சனம் இதுவல்ல. கறையின் மீது விழுந்த பனித்துளிகள் அவர்கள்.
காணொளியை காண
https://www.youtube.com/watch?v=vSA42IO8owk&t=10s
வாசனை
தனி மனித வாசனை எதில் எல்லாம் தென்படும் என்று என்னிடம் நானே கேட்டுக்கொள்வதுண்டு. ஒரு சில ஏற்றுக்கொள்ளத்தக்க பதில்களை மனமே உருவாக்கிக்கொள்வதும் உண்டு. நாம் எடுக்கும் முடிவுகளில் எம்மை அறிந்து கொள்ளலாம் என்று தோன்றியது. இருந்தும் நான் எடுக்கும் முடிவுகள் தனி மனித சிந்தனைகளின் வெளிப்பாடுதானா என்பதில் நிச்சய ஐயம் உண்டு. உங்களது முடிவுகளில் வேறு யாரும் இல்லையா ? இல்லை என்றால் இத்தோடு புதிய தலைமுறைக்கான ஆட்சேர்ப்பினை உங்களில் இருந்து தொடங்குகிறேன். ஆம் என்றால் நீங்களும் நானும் ஒரே ஓலைச்சுவடிகள் தான். தனி மனித வாசனை தெரியவே தெரியாத பல காலமாய் தூசுகளும் கரையான்களும் படிந்த ஓலைச்சுவடிகள் தான் நாம். எம் முடிவுகளில் மூத்தோரின் அனுபவங்களும் வரலாற்றின் பாதிப்பும் கட்டாயம் தலை தூக்கிநிற்கும். இவற்றை மீறி முடிவுகளை எடுத்துக்கொள்ள நாம் அதிக சிரத்தை காட்டுவதில்லை. ஏன் எனில் எம்மால் எடுக்கப்படும் சார்பான முடிவுகள் எமக்கு சிரமங்களை தருவதில்லை. எனவே நாம் சுயமான முடிவுகளை எடுக்க கூடிய மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள முடிவதில்லை. எமது முடிவுகளில் தனி மனித வாசனை விசுவதே இல்லை.
கண்களை மூடி பிராணாயாமம் செய்து விட்டு மனக்கண்ணால் பாருங்கள் அதோ அங்கு ஓடும் அதிசய மான் தான் நீங்கள். அங்கு ஒரு வேளை உங்கள் தனி மனித வாடை வீசலாம்….
உலக தாய்மொழித் தினம் 2017
எனக்கு இன்னும் அதிகமா ஞாபகம் இருக்கின்றது.அந்த வெளிறிய கண்கள், நரைத்த ஐதான கேசம், நரம்போடியிருந்த கைகள் கால்கள், கசக்கி போட்டிருந்த டிஸு போன்ற முகம் , நடையில் அதிக தளர்வு, நிதானமின்மை, என அடையாளப்படுத்தலுக்கு குறைவில்லாத தேகம்.
”நான் உன்னோடு அதிக காலம் பழகி இருக்கிறேன். உன்னில் அக்கறை எடுத்து கொள்வதற்கு எனக்கு உரிமை உள்ளது. நெடுகாலமாய் இந்த கேள்வி என் ஆழ் மனதின் சுரங்கங்களில் தீர்க்கமுடியாத ஊற்றாய் பீறிட்டுக்கொண்டிருக்கிறது. ” என்று நான் அந்த உருவத்திடம் போலியான வசனங்களை சேர்த்துக்கொண்டு கேள்விக்கான தயார்படுத்தலை ஆரம்பிக்க தொடங்கினேன்.
அது வழி எங்கும் சீழ் கொட்ட மறைந்துகொண்டே சென்றது.
கேள்விகளை தயார்படுத்திய என்னால் அந்த உருவத்தை சேர்த்துக்கொள்ள முடியாமல் போனது.
உலக தாய்மொழித் தினம்